Skip to main content

Posts

Featured

எண்ண ஓட்டங்கள் - பதிவு இரண்டு

  வானகம் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் கூடுகை நவம்பர் 26, 2023 அன்று ஈரோடு அருகே திரு.குமார் அவர்களின் "மருதம் இயற்கை வேளாண் பண்ணை"யில் நடைப்பெற்றது. இந்த பயிற்சி மற்றும் வானகம் அமைப்பினர் நடத்தும் மற்ற பயிற்சிகள் குறித்து மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள இணைப்புகள் 1,2 சொடுக்கவும்.   (அ) எந்த வகையிலும் விவசாய பின்புலம் இல்லாத எனக்கு இந்த பயிற்சியில் பங்கெடுக்க அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை என்பதே பெரிய வரம். :)   (ஆ) பயிற்சி நாள் அன்று, நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே, உதவி செய்கிறேன் என்ற பெயரில், நறுக்கி வைத்திருந்த மாங்காய் சட்டியைக் கொட்டினேன். அத்தோடு நிற்காமல், கொட்டியதற்கு பரிகாரமாக மீதமிருந்த மாங்காயை துண்டு துண்டாக நறுக்கலாம் என்ற முயற்சியில், இடதுகை பெருவிரலில் சிறுவெட்டு. வெட்டுண்ட இடத்தில் தண்ணீர் கொண்டு துடைத்துக்கொண்டேன். இதனைப் பார்த்துவிட்டு திரு.குமார் அவர்கள் அருகிலிருந்தவர்களிடம் ஏதோ சொல்ல, ஒரு நண்பர் பக்கத்திலிருந்த தோட்டத்துக்குள் சென்று (அவருடைய) கையளவு இலைகளைக் கொண்டுவந்து காயம்பட்ட இடத்தில் நன்றாக பிழிந்துவிட்டதுடன், அந்த இலைகளை அதே இடத்த

Latest Posts

எண்ண ஓட்டங்கள் - பதிவு ஒன்று

Overseas Travel with Family

Chennai Bangalore Link . . .

Spelling invention . . . Part I

Gandhi Tablet -- Chennai Central

Indo-British Review -- A Journal of History . . . Part II

Indo-British Review -- A Journal of History . . . Part I

Loooong breeeeaaaakkkkk . . . . .