எண்ண ஓட்டங்கள் - பதிவு ஒன்று
சிலவருடங்கள் முன்புவரை, தனித்தோ அல்லது தெரிந்தெடுத்த சிறுகுழுவினருடனோ, வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது மலையேற்றம் செல்வதுண்டு. உடல்நல காரணங்களை முன்வைத்து, ஆயுர்வேத மருத்துவரின் அறிவுரைக்கேற்ப, மலையேற்றம், நெட்டோட்டம் என முற்றிலுமாக தவிர்த்து நடைப்பயிற்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்திவந்தேன். இந்த நிலையில் தான் வெகுநாட்களுக்குப் பிறகு இயற்கை சார்ந்த ஒரு கூடுகையில் கலந்துகொள்ள வாய்ப்பும் கிட்டியது. இந்தக் கூடுகையை ஒழுங்கமைத்தது வானகம்.
கூடுகையில் சற்றேறக்குறைய ஐம்பது பேர் இருந்தோம். அதில் இளைஞர்கள் அதிகம், பெண்களும் இருந்தனர். சிலர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கெடுத்துக் கொண்டனர்.
நிற்க, 1992-இல் ஆடவர் கிரிக்கெட் உலக்க்கோப்பையை இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் அணி வென்றது. '60 Minutes Australia' என்ற தொலைக்காட்சி தொடருக்காக இம்ரான்கானுடன் நேர்காணல் நடைப்பெறுகின்றது.அதன் YouTube இணைப்பு கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது. தனது தாயாரின் நினைவாக லாகூரில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக் கட்டிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது இம்ரான் முழுநேர அரசியலில் இல்லை. காட்சி மருத்துவமனையிலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுகிறது. அன்றையப் பாகிஸ்தானின் நிலைக்குறித்தான கேள்விக்கு "அவநம்பிக்கை என்பது இஸ்லாத்தில் (அதாவது குரானில்) பாவமாகக் கருதப்படுகின்றது" என்று எதிர்கொள்வார்.
நான் கலந்துகொண்ட கூடுகைக்கும் இதற்க்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
(1) https://www.youtube.com/watch?v=FeYr9PWYpfU
Comments