பரங்கிப்பேட்டைக் கடிதம் - பாகம் ஒன்று
பரங்கிப்பேட்டை - கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 'Firangi' என்று 'Hindi/Urdu' மொழிகளில் வழங்கப்படும் சொல்லே, தமிழில்/மலையாளத்தில் 'பரங்கி/பரங்கியர்' என்றாயிற்று(1).
பின்வரும் இணைக்கப்பட்டுள்ள கடிதம் லா.காதர் பாஷா என்பவரால் இராயவரத்தைச் சேர்ந்த சி.த.ப.மு.வீ.அழகப்பா செட்டியார் என்பவருக்கு 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதியிட்டு எழுதப்பட்டுள்ளது.
அந்த காலத்திய எழுத்துமுறைப்படி, பெறுநரின் ஊர்ப்பெயர் உயிர் ஒட்டின்றி(?) 'றா'யவரம் என்றுள்ளது.
மேலும், இந்தக் கடிதத்திலுள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு இரண்டு பிள்ளையார் சுழிகள் -- பெறுநரின் பெயர் மற்றும் முகவரி அமைந்துள்ள வெளிமுகப்பிலும் மற்றும் கடிதத்தினுள்ளேயும் அமைந்துள்ள இவற்றின் தனித்தன்மைக்குக் காரணம் அனுப்புனர் இஸ்லாமிய மதத்தவர். பெறுநர் நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்பதனால் அந்த சமூகத்தினர் வழமைக்கு ஏற்ப -- கடிதம் மட்டுமின்றி எவ்விதமான குறிப்பானாலும், அவற்றை எழுத தொடங்கும் முன்பு முதலில் சுழியுடன் ஆரம்பிப்பது இவர்களின் இயல்பாகும் -- அதையே அடியொட்டியுள்ளார் அனுப்புநர்!
முதலாளிக்கு எழுதும் ஊழியர் அவரின் மனம் கோணாமல் இருக்கவும் முயன்றுள்ளார் என்றும் கருதிகொள்ளலாமா?
இந்தக் கடிதத்தைக் கூர்ந்து கவனித்தால், தமிழில் 'கோர்வையெழுத்து' அல்லது 'வீச்செழுத்து' (cursive or joint handwriting in English) என்று அறியப்பட்ட எழுத்துமுறையின் வடிவம் சில சொற்றொடர்களில் இருப்பது புலப்படும்.
(1)https://en.wikipedia.org/wiki/Farang
Comments