பள்ளியும் ஹள்ளியும் -- 1

    20 வருடங்கடளுக்கு முன்பு வேலை நிமித்தமாக சென்னையிலிருந்து கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவிற்கு இடம் மாற்றாலாயிற்று. பெரும் பன்னாட்டு நிறுவனமான Unilever-இன் இந்திய அங்கமான Hindustan Unilever-இன் மிகப்பெரிய அலுவலகமிருந்த Brookefield என்னும் பகுதியில் வீடெடுத்து குடியேறினோம். இந்த பகுதியினை சுற்றி அமைந்துள்ள இன்னபிற 'ஹள்ளிகளை' ஒன்றிணைத்து அவற்றிற்கான துணை தபால் நிலையம் Marathahalli (மாரத்தாஹள்ளி) என்னுமிடத்தில் உள்ளது. மிகவும் பிரபலமான Whitefield (ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது) இந்த தபால் பரப்பிற்குள் வராது.


    Kundalahalli, Thubarahalli, Chinnapanahalli, Nallurhalli, Kadubeesanahalli, Devarabeesanahalli, Kaikondarahalli -- இவையெல்லாம் எங்களின் வாழ்விடத்துக்கு அருகாமையிலுள்ள இன்னபிற 'ஹள்ளிகள்'.


    தேவனஹள்ளி (Devanahalli) -- பெங்களூர் விமான நிலையம் அருகாமையிலுள்ளது. இந்த பகுதி மிகவும் சரித்திரப் புகழ்ப்பெற்றது -- குறிப்பாக ஹைதர் அலியின் மகனும் மைசூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக மூன்று முறை மிகப்பெரிய அளவில் போரிட்ட திப்பு சுல்தானின் பிறப்பிடம்.


    தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளடக்கிய நான்கு திராவிட மொழிகளில் 'பள்ளி', மற்றும் 'ஹள்ளி'யில் முடியும் பல்வேறு இடப்பெயர்களை கே.எம்.ஜார்ஜ் 'தென்னிந்திய இடப்பெயர்கள்' என்னும் நூலில் சுட்டுகிறார். இந்த நூல் திருவனந்தபுரத்தை சார்ந்த 'Dravidian Linguistics Association' என்ற நிறுவனத்தால் 1986-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.


உசாத்துணை (மேலதிக விவரங்களுக்கு):

(1) https://citizenmatters.in/bangalore-to-bengaluru-ooru-halli-pete-bangalore-naming-history/

(2) PLACE-NAMES OF SOUTHERN INDIA, K.M.George, Published by Dravidian Linguistics Association, 1986

Comments

Popular Posts