பரங்கிப்பேட்டைக் கடிதம் --- பாகம் இரண்டு
லா.காதர் பாஷ்ஷா என்பவரால் பரங்கிப்பேட்டையிலிருந்து அவரது முதலாளி சித.ப.மு.வீ.அழகப்பா செட்டியாருக்கு 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் எழுதிய கடிதத்தின் முழுமையான ஒளிவடிவம். முழுக்கடிதத்தின் ஒளிவடிவம் இக்கடிதத்தின் பொருளடக்கம்: "முதலாளி அவர்களுக்கு காதர் பாஷ்ஷா எழுதிக்கொண்டது. செப்டம்பர் மாதம் 13 தேதி பிரப்படும் ( புறப்படும் ) பிரஞ்சு மெயிலில் சைகோனுக்கு பட்டாளம் ( போர் வீரர்கள் ) ஏத்திக் கொண்டு போகும்படி புதுச்சேரிக்கு தந்தி வந்துவிட்டதாம். அதனால் செக்கன் கிளாசும் ( இரண்டாம் வகுப்பு ) பஷ்ட் கிளாசும் ( முதல் வகுப்பு ) டிகட்டு ( டிக்கெட்டு ) கொடுக்கிறார்களாம். இந்த கப்பல் காரைக்காலுக்கும் வரவில்லை. இனி பிரஞ்சு மெயிலை எதிர்பார்த்தால் இரண்டு மாதமாகும். ஊர்கப்பலில் போகலாமென்ரு ( போகலாமென்று ) யோசித்துயிருக்கிறேன். அதில் போகலாமென்று தங்கள் எழுதினால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆவணி கடைசியாக போகலாம். தாங்கள் யோசனை போல பிறப்பட தயாராயிருக்கிறேன் சுணங்காமல் உடனே எழுதி அனுப்பவும். புதுச்சேரி போய் இன்றுதான் பறங்கிப்பேட்டைக்...